விஜயை பார்க்க ஓடிவந்த மாற்றுத்திறனாளி பெண் அதிர்ச்சி-பரபரப்பு வீடியோ tvk meeting today | tvk vijay
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடந்தது. விஜய் பங்கேற்க போகிறார் என்று அறிவிப்பு தொண்டர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது.
எப்படியாவது விஜயை பார்த்து விட வேண்டும் என்று ஆவடியில் இருந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பனையூர் வந்தார்.
விஜயை பார்க்க முடியாததால் ஆவேசம் அடைந்தார்.
‛ஒரு வருஷமா எப்படியாவது விஜயை நேருல பார்த்துடனும்னு வந்து போய்கிட்டு இருக்கேன். இப்ப கூட ஆவடில இருந்து 2 பஸ் மாறி வர்றேன். 10 நிமிஷமாச்சும் பேசிடனும்னு. இப்பவே இப்படினா ஜெயிச்சாருனா என்ன ஆகும் என்று அந்த பெண் ஆதங்கப்படும் காட்சி வெளியானது.
விஜயை சந்திக்க விடாமல் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தடுப்பதாக மாற்றுத்திறனாளி பெண் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூலை 04, 2025