விஜய்க்கு அதிர்ச்சி... சிபிஐ ஆபீசில் நடந்தது என்ன? | TVK vijay | cbi investigation | karur stampede
தவெக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக சமீபத்தில் டில்லி சிபிஐ ஆபீசில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். முதல் முறையை விட, இந்த தடவை சிபிஐ ஆபீசில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடிவிட்டனராம். சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே ஒரு கூட்டம்; அதே போல உள்ளேயும் ஒரு கூட்டம். உள்ளே இருந்த ரசிகர்கள் வேறு யாருமல்ல. சிபிஐ அதிகாரிகள் மற்றும் அங்கு பணிபுரிவோரின் மனைவியர், குழந்தைகள் தான். இவர்களே பெரிய கூட்டமாக வரவேற்பறையில் கூடியிருந்தார்களாம். ரிசப்சனில் விஜய் நுழையும் போதே, காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள்கள் வரவேற்று நமஸ்தே என்று கூறினர். சில சிபிஐ அதிகாரிகள் மற்றும் போலீசார், விஜயுடன் செல்பி எடுத்துக் கொண்டனராம். இன்னொரு பக்கம் அதிகாரிகளின் மனைவியர் சிலர், விஜய்... விஜய்... என்று கத்திவிட்டனர். ஓரு சிலர் விஜய்யை கட்டிப்பிடிக்காத குறையாக கை குலுக்கினராம். சில அதிகாரிகளின் குழந்தைகளும், விஜய்... விஜய்... என்று கூச்சலிட்டனர். அவர்களும் போட்டோ, செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட, பொறுமையாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினாராம் விஜய். அதே சமயம் ஏகப்பட்ட பாதுகாப்பும் விஜய்க்கு கொடுக்கப்பட்டது. விசாரணையின் போது, அமைதியாக நன்றாக நடந்து கொண்டார் விஜய் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். #TVKVijay #CBIInvestigation #KarurStampede #TamilNaduNews #BreakingNews #CrimeReport #Investigation #PublicSafety #VijayTV #CurrentEvents #SocialIssues #NewsUpdate #IndiaNews #JusticeForVictims #PreventiveMeasures #TrendingNow #LocalNews #EmergencyResponse #CommunityAwareness