விஜய் வீடு முன் திடீரென மாறிய காட்சி-என்ன நடக்குது? karur stampede | tvk vijay | vijay house video
கடைசி 2 நாட்களை விட திடீர் மாற்றம் விஜய் வீடு முன் குவிக்கப்பட்ட போலீஸ் போக்குவரத்துக்கும் தடை நீலாங்கரையில் பரபரப்பு கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த துயர சம்பவத்துக்கு பிறகு சென்னை புறப்பட்ட விஜய், இரவு 11:45 மணி அளவில் நீலாங்கரை வீட்டுக்கு வந்தார். சம்பவம் தொடர்பாக தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பது தொடர்பாகவும் அடுத்தடுத்து 2 அறிக்கை வெளியிட்டார். ஞாயிறு முழுதும் வீட்டிலேயே இருந்தார். 34 மணி நேரத்துக்கு பிறகு நேற்று வீட்டை விட்டு வெளியே வந்த விஜய், எம்ஆர்சி நகரில் உள்ள வீட்டுக்கு சென்றார். மாலை வரை அங்கிருந்தவர் பின்னர் மீண்டும் நீலாங்கரை வீட்டுக்கு வந்தார். எம்ஆர்சி நகரில் வைத்து சம்பவம் தொடர்பாகவும், வழக்கு தொடுப்பது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இப்போது மீண்டும் நீலாங்கரை வீட்டில் விஜய் தங்கி இருக்கும் நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் இருந்ததை விட பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். விஜய் வீட்டின் 2 பக்கமும் பேரிக்கார்டுகள் வைத்து அடைத்து இருக்கின்றனர். வழக்கமாக அந்த வழியாக செல்வர்கள், மற்ற போக்குவரத்துகளை தடை செய்து விட்டனர். அந்த பகுதியில் வசிப்பவர்களின் வாகனங்கள் மட்டும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்கப்படுகின்றன. விஜய் வீட்டு முன்பு மக்கள் கூடுவதற்கும் போலீசார் தடை போட்டுள்ளனர். இதனால் விஜய் வீட்டு முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.