உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீரென வீடு மாறிய விஜய்... பரபரப்பு பின்னணி | karur stampede | tvk vijay update | vijay karur plan

திடீரென வீடு மாறிய விஜய்... பரபரப்பு பின்னணி | karur stampede | tvk vijay update | vijay karur plan

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த துயர சம்பவத்துக்கு பிறகு சென்னை புறப்பட்ட விஜய், இரவு 11:45 மணி அளவில் நீலாங்கரை வீட்டுக்கு வந்தார். கரூர் சோக சம்பவத்தால் தனது இதயம் நொறுங்கி விட்டதாக அறிக்கை வெளியிட்டார். பின்னர் காலையில் 2வது அறிக்கை வெளியிட்டார். சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த விஜய், மரணம் அடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார். மற்றபடி கட்சியினர் யாரையும் அவர் சந்திக்கவில்லை. ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஓரிரு முறை தவெக உயர்மட்ட நிர்வாகிகளுடன் செல்போனில் மட்டும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய்க்கு பல தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததால், அவர் வீட்டை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு இருந்தது. வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவமும் வந்திருந்தது. ஞாயிறு முழுதும் வீட்டிலேயே இருந்த விஜய், இப்போது திடீரென சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இன்னொரு வீட்டுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார். கிட்டத்தட்ட 34 மணி நேரத்துக்கு பிறகு அவர் நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் காரில் ஏறி எம்ஆர்சி நகர் புறப்பட்டார். அங்கு அவர் தவெக உயர் மட்ட நிர்வாகிகளை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பல தரப்பினரும் முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அவர் சீக்கிரமே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க இருக்கிறார் என்று தவெக வட்டாரம் கூறி உள்ளது. கரூர் செல்வது தொடர்பாகவும், சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடுத்தது தொடர்பாகவும் விஜய் ஆலோசனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. #KarurStampede #TVKKarurMeeting #TVKVijay #KarurNews #StampedeAlert #BreakingNews #PoliticalMeeting #VijayUpdates #KarurCommunity #LocalNews #PublicSafety #NewsInKarur #WatchNow #VijayInFocus #EventCoverage #KarurEvents #EmergencyResponse #TraumaCare #CommunitySupport #SafetyFirst

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை