/ தினமலர் டிவி
/ பொது
/ ஆட்சியில் பங்கு விவகாரம் யாருக்கு சாதகம்? | TVK | DMK | DMK Alliance | 2026 Elections
ஆட்சியில் பங்கு விவகாரம் யாருக்கு சாதகம்? | TVK | DMK | DMK Alliance | 2026 Elections
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ஒரு சில ஆண்டுகளில் பிற கட்சிகள் தயவுடன் ஆட்சியை பிடித்தாலும் அக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லை. இப்போது சட்டசபை தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு என திமுகவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி தர துவங்கியுள்ளன. அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் இந்த பேச்சை முன்னெடுத்து உள்ளனர். தவெக முதல் மாநாட்டில் கூட்டணியில் வரும் கட்சிகளையும் ஆட்சியில் சேர்த்துக் கொள்வோம் என விஜய் பேசிய பின்பே இந்த முழக்கங்கள் கேட்கத் துவங்கின.
ஜூலை 19, 2025