உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் போடும் முதல் கையெழுத்து - வெளியான பரபரப்பு தகவல்

விஜய் போடும் முதல் கையெழுத்து - வெளியான பரபரப்பு தகவல்

விஜய் போடும் முதல் கையெழுத்து - வெளியான பரபரப்பு தகவல் #TVK #VIJAY #TNpolitics #NewGovt #Chennai #VijayUpdate #TVKmanifesto #TamilNaduPolitics ஒரு கட்சியின் வெற்றிக்கான கதாநாயகனாக அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கை தான் இருக்கும் அந்த வகையில் சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக,, அதன் தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் ஒன்று வெற்றிப்பயணம் திட்டம் அதன்படி, தமிழ்நாட்டில் நகர அரசுப்பேருந்துகள் மட்டுமின்றி அனைத்து அரசுப்பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என விஜய் அறிவித்திருந்தார் இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது இந்நிலையில், நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ள விஜய், எந்த திட்டத்திற்கான கோப்பில் முதலில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இந்நிலையில் நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் வெற்றிப்பயணம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கோப்பில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது விஜய் அறிவுறுத்தலின் பேரில் வெற்றிப்பயணம் திட்டத்திற்கான கோப்புகளை தமிழக போக்குவரத்து துறை தயார் செய்து வருகிறது ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்திலும் விஜய் கையெழுத்திடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது

மே 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை