விஜயை இழுக்க அமித்ஷா மெகா பிளான்-பரபர தகவல் tvk vijay | amit shah plan | admk bjp tvk alliance plan
கூட்டணிக்கு விஜய் கட்சியை இழுக்க, அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. அமித் ஷா யோசனைப்படி, விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டரிடம், பழனிசாமி ஆதரவு தொழிலதிபர் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முடித்துள்ளது. முதல் கட்டமாக, கொங்கு மண்டலத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் சந்தித்துள்ளார். அடுத்தகட்டமாக, தென் மண்டல பூத் நிர்வாகிகளை மதுரையில் சந்திக்க உள்ளார். கோவை நிகழ்ச்சிக்கு சென்ற விஜய்க்காக கூடிய கூட்டம் பெரிய கட்சிகளுக்கே கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு முன் அவர் பரந்தூர் உட்பட சில ஊர்களுக்கு சென்றபோதும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. இதை மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கவனித்து, தலைமைக்கு குறிப்பு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் விஜய் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்ற எண்ணம், அதிமுக, பாஜ தலைவர்களிடம் வலுப்பெற்றுள்ளது.