இனி அரை மணி நேரம் தான்: மொத்தமாக மாறும் விஜய் திட்டம் | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam |
#TVKVijay #HelicopterCampaign #TamilNaduElections #VijayPolitics #TVK2026 #AerialTour #JayalalithaaLegacy #BengaluruContract #TamilPolitics #ElectionStrategy தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் விஜயின் தவெக வளர்ந்து வருகிறது. கட்சியை துவக்கியவுடன் 2026 சட்டசபை தேர்தல் களத்தில் வெற்றிக்கான கூட்டணி கணக்கை முடிவு செய்யும் வலுவான இடத்திற்கு முன்னேறியுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை பிரசாரம் என்ற புதிய நடைமுறையை பின்பற்றி அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார் விஜய். கரூர் சம்பவம் அவருக்கு பின்னடைவாக அமைந்ததால் அமைதியானார். அவரது கட்சியை ஆளும் கட்சி அரசியல் செய்து முடக்கலாம் என்கிற அச்சம் நிலவியது. இப்போது கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட பின் த.வெ.க.வினர் சற்று சுறுசுறுப்பாகினர்.