உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு வழங்கிய உதயநிதி; பொங்கி எழுந்த பெண்கள் | Udhayanidhi stalin | Dmk | Protest

வீடு வழங்கிய உதயநிதி; பொங்கி எழுந்த பெண்கள் | Udhayanidhi stalin | Dmk | Protest

எங்க ஏரியா பேர வெச்சு அவங்களுக்கு வீடு தர்றாங்க! மறியல் செய்த பெண்கள் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணப்பர் திடலில் தங்கியிருக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடு ஒதுக்கப்பட்டது. நேரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டபோது, அங்கிருந்து காலி செய்யப்பட்ட மக்கள் தான் இவர்கள். பெரியமேட்டில் உள்ள சமுதாய கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி, வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். breath நிகழ்ச்சியை முடித்துகொண்டு உதயநிதி கிளம்பிய சிறிது நேரத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் அங்கு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணப்பர் திடலை சேர்ந்த உண்மையான மக்களே நாங்கள்தான். எங்களுக்கு வீடு தராமல், சைதாம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடு தந்துள்ளார்கள். எங்கள் ஏரியா பெயரில் மற்றவர்களுக்கு வீடு கொடுத்துள்ளார் எனக்கூறினர். மறியல் செய்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து பஸ்சில் ஏற்ற முயன்றதால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. breath & byte நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, முன்னுரிமை அடிப்படையில் காப்பகங்களில் வசிப்பவர்களுக்கு முதலில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மற்றவர்களுக்கும் வீடு ஒதுக்கப்படும் என்றனர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை