உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசு லாரி சூறை-பதற்றம் palamedu jallikattu | viral video | udhayanidi issue

பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசு லாரி சூறை-பதற்றம் palamedu jallikattu | viral video | udhayanidi issue

உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில், பரிசு பொருட்களை வைத்திருந்த லாரியை காளைகளின் உரிமையாளர்கள் சூறையாடி, பரிசுகளை அள்ளி சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியொரு சம்பவம் நடப்பதற்கு வழக்கத்துக்கும் மாறாக போட்டியை தாமதமாக துவங்கியது தான் காரணம். அதாவது, காலை 7:30 மணிக்கு போட்டி துவங்கப்படும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் துணை முதல்வர் உதயநிதிக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வாடி வாசல் வரை அழைத்து வர தாமதமானது. இதனால் காலையிலேயே சலசலப்பு ஏற்பட்டது. போட்டி தாமதமாக துவங்கியதால், கடைசி நேரத்தில் டோக்கன் வழங்கிய காளைகளை கூட அவிழ்க்க முடியாமல் போனது.

ஜன 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை