உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2025லும் இருட்டில் வாழும் மக்கள்! வெளிச்சம் எப்போது? | Udumalaipet | Tirupur | Forest

2025லும் இருட்டில் வாழும் மக்கள்! வெளிச்சம் எப்போது? | Udumalaipet | Tirupur | Forest

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 15 மலை கிராமங்கள் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமல், புறக்கணிக்கப்பட்ட மக்களாக வாழும் தனித்தீவு போன்ற இப்பகுதிக்கு கரடு, முரடான பாதையில் பல கிமீ நடந்தே பயணித்து மக்களை சந்தித்தது தினமலர் குழு. மாவடப்பு, காட்டுப்பட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, கருமுட்டி, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, ஈசல்திட்டு, திருமூர்த்திமலை, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கரட்டுப்பதி ஆகிய 15 கிராமங்களில் 1200 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள் தங்க தரமான வீடு இல்லை. மண் குடிசையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் வாழ்கின்றனர். இரவில் மின்சார வசதி இல்லாமல் வன விலங்குகள் ஆபத்தும் உள்ளது.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை