உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நில தகராறில் முன்னாள் காதலன் வெறிச்செயல்! Uganda | Olympic Marathan Athlete | Set fire on | Died

நில தகராறில் முன்னாள் காதலன் வெறிச்செயல்! Uganda | Olympic Marathan Athlete | Set fire on | Died

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா செப்டேகி Rebecca Cheptegei. 33 வயதான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அவர் 44-வது இடம் பிடித்தார். செப்டேகி கென்யாவில் வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது முன்னாள் காதலன் டிக்சன் என்டிமா மரங்காச் Dickson Ndiema Marangach. வயது 44. இருவருக்கும் கென்யாவில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்னை இருந்தது. அதுகுறித்து தகராறுகளும் நடந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராங்கனை செப்டேகி, சர்ச்சுக்குப் போய்விட்டு தனது இரண்டு மகள்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது டிக்சன் என்டிமா வந்து தகராறு செய்து, செப்டேகியை தாக்கினார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி