உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுக்க உக்ரைன் போடும் கணக்கு Ukrain helps to Syria | Iran - Syria | Israel - S

ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுக்க உக்ரைன் போடும் கணக்கு Ukrain helps to Syria | Iran - Syria | Israel - S

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகள் நிலைகுலைந்துள்ளன. எனினும், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் உதவியால், உக்ரைன் போர்க்களத்தில் பின்வாங்காமல் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சிரியாவில் உள்நாட்டு கலவரம், ஈரான், ஹெஸ்புலாக்கள் ஆதிக்கம் என நீண்ட நாட்களாக அமையில்லாத நிலை நீடிக்கிறது. எல்லை பிரச்னை காரணமாக சிரியா - இஸ்ரேல் இடையேயும் மனக்கசப்பு ஏற்பட்டு, தாக்குதல்கள் நடைபெற்றன. உக்ரைன் போலவே, சிரியாவும் பல்வேறு தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ளது. அங்கு வாழும் மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிரியாவுக்கு உதவ உக்ரைன் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ஜெலன்ஸ்கி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி