ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் பயங்கர தாக்குதல்
#UkrainRussiawar #UkrainattackonRussia #Ukrainattack #Samaraattack #Samara #Trump #USA ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது . இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், அந்தப் பிராந்தியம் மட்டுமின்றி, உலக அரங்கில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்தாலும், அந்நாட்டின் பெட்ரோல், டீசல் தேவையை பூர்த்தி செய்ய வேறு வழியின்றி, ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நவம்பரில் நடக்கும் தேர்தலை மனதில் வைத்து, தங்கள் நாட்டிற்கான எரிபொருள் சப்ளையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதற்காக, ரஷ்யா மீதான உக்ரைன் தாக்குதலை நிறுத்தும் படிக் கூறினார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் உதவி தேவைப்படுவதால், உக்ரைனும், அமெரிக்க அதிபரின் அழுத்தத்திற்கு உடன்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்ய எண்ணெய் சுத்திரிப்பு ஆலைகள் மீது தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக உக்ரைன் அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் சமாராவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ரஷ்யா ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஆலை பயங்கர சேதம் அடைந்தது. ஏராளமான எண்ணெய் பீப்பாய்கள், சுத்திகரிப்பு கருவிகள் தீயில் கருகி நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெய் விற்பனை மூலம், ரஷ்யாவுக்கு கிடைக்கும் பொருளாதாரமே உக்ரைனுக்கு எதிரான போரில் அந்நாட்டிற்கு கைகொடுப்பதாக உக்ரைன் தாெடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. எனவே, ரஷ்யாவின் எண்ணெய் வளங்கள், சுத்திகரிப்பு மையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக உக்ரைன் அறிவித்த நிலையில், ரஷ்யா மீதான திடீர் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.