உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதையும் செய்வார் புடின்; ஜெலன்ஸ்கி தாக்கு

எதையும் செய்வார் புடின்; ஜெலன்ஸ்கி தாக்கு

உக்ரைன் மீது போர் தொடர்ந்த ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான இடங்களை கைப்பற்றி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த முயற்சி எடுத்துள்ள நிலையிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி தந்து வருகிறது. இந்த போரில் ரஷ்ய ராணுவத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்படுவதாக நீண்டகாலமாக புகார் உள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடுவோரை ஏஜென்ட்கள் மூலம் ஏமாற்றி போரில் முன்கள வீரர்களாக ரஷ்யா பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்தியர்கள் கூட அப்படி சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். வடகொரியா, சீனா, பெலாரஸ் போன்ற நாடுகள் ரஷ்ய ராணுவத்துக்கு உதவ ஆட்களை சப்ளை செய்வதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்துள்ளது. இது பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, சீன வீரர்கள் உக்ரைனின் டொனெட்ஸ்க்Donetsk என்ற இடத்தில் பிடிபட்டு உள்ளனர். அவர்கள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களிடம் இருந்து அடையாள ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களை தவிர, உக்ரைனின் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் பல சீன வீரர்கள் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அது தொடர்பாக எங்களது உளவுத்துறை விசாரித்து வருகின்றன. ரஷ்ய ராணுவத்தில் சீன வீரர்கள் ஈடுபட்டது பற்றி சீனாவிடம் கேட்க வெளியுறவு துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை