உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளக்குறிச்சி DSP பகீர் ஆடியோ லீக்-பரபரப்பு ulundurpet dsp Pradeep audio | dsp pradeep audio leak

கள்ளக்குறிச்சி DSP பகீர் ஆடியோ லீக்-பரபரப்பு ulundurpet dsp Pradeep audio | dsp pradeep audio leak

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியில் மணல், வண்டல் மண் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடத்தல் மன்னர்களிடம் போலீசார் பேரம் பேசி, கனிமங்களை கொள்ளையடிக்க க்ரீன் சிக்னல் காட்டுவதாக குற்றச்சாட்டு வெடித்தது. இந்த நிலையில் மண் கடத்தல் கும்பல் மற்றும் ராட்டினம் அமைப்பவர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்கிய விவகாரம் உளுந்தூர் பேட்டை சரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்த்த 2 போலீசார் தூக்கியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் டிஎஸ்பியே மண் மாஃபியாக்களிடம் பேரம் பேசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, கடத்தல் மன்னர்களிடம் பேரம் பேச சொல்லி உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப், போலீஸ்காரரை அனுப்பி வைக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்படி பேரம் பேச வேண்டும் என்பது பற்றி போலீசாருக்கு அவர் தெளிவாக விளக்குகிறார். ‛டிஎஸ்பிக்கு 5 ஆயிரம்; உனக்கு ஆயிரம் ரூபாய். இத சொல்லி பேரம் பேசனும். போ போய் பேசிட்டு வா என்று போலீசாரை அவர் அனுப்பி வைக்கிறார். டிஎஸ்பியின் வசூல் வேட்டை ஆதாரத்துடன் வெளியானதால் கள்ளக்குறிச்சி போலீஸ் டிப்பார்ட்மென்டை ஆட்டம் கண்டுள்ளது. இப்படி வசூல் வேட்டை நடத்தும் அதிகாரிகளை சும்மா விடக்கூடாது என்று ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ