உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உளுந்தூர்பேட்டை ஆஸ்பிடலில் நடந்த பரபரப்பு சம்பவம் | Police head constable | Attack old lady | Ulundu

உளுந்தூர்பேட்டை ஆஸ்பிடலில் நடந்த பரபரப்பு சம்பவம் | Police head constable | Attack old lady | Ulundu

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தில் தைப்பூசத்தன்று விடுமுறை அறிவிப்பை மீறி கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததில் இரு தரப்பிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. அதில் குணசேகரன் என்பவர் காயமடைந்ததாக கூறி உறவினர்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர். குணசேகரன் மது போதையில் இருந்ததால், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் காவல் உதவி மையத்தில் இருந்த பெண் காவலர், குணசேகரன் உடன் வந்த மூதாட்டியை அழைத்து விசாரித்தார். அப்போது சிகிச்சை பெற வந்த குணசேகரன் போதையில் ஆபாசமாக திட்டயதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஏட்டு ஜெயச்சந்திரன் அந்த இளைஞரை கடுமையாக தாக்கினார்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ