கடலுக்குள் 50 அடி ஆழத்தில் மோதிரம் மாற்றிய மணமக்கள் | Under water marriage | New Love pair | Puduche
புதுச்சேரியை சேர்ந்த ஜான் டீ பிரிட்டோ, தீபிகா இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், தீபிகா மீது காதல் கொண்ட பிரிட்டோ கடந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்தினார். சென்னை ஈசிஆர் சாலையில் பாரா கிளைடரில் பறந்து வானத்தில் இருந்தபடி வித்தியாசமான முறையில் செய்த பிரிட்டோவின் பிரபோசலை தீபிகாவுக்கும் ஏற்றுக்கொண்டார். ஆழ்கடல் நீச்சல் வீரரான தீபிகா, திருமணத்தை கடலுக்கு அடியில் நடத்த விரும்பினார். அதற்கு பிரிட்டோவும் சம்மதித்தார். 2 வாரங்கள் பயிற்சி எடுத்தார். ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீயின் ஏற்பாட்டில் புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் திருமண அலங்காரங்கள் செய்யப்பட்டது. பிரிட்டோ - தீபிகா இருவரும் திருமண கோலத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கடல் பாதுகாப்பு மற்றும் கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருமணம் செய்து கொண்டனர். கடல் மாசுபாடு, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டதாக மணமக்கள் தெரிவித்தனர்.