தனிநபரை அடையாளப்படுத்த செலவிடப்படும் வரிப்பணம் | UngaludanStalin
முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்று வருகிறார். அரசின் நடவடிக்கைக்கு தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் பெயர் வைத்திருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ள விவரம்; அரசு சார்ந்த திட்டம் முதல்வரின் தனிப்பட்ட அடையாளத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இது, ஒரு அரசியல் பிரமுகருக்கு ஆதரவாக அரசு அதிகாரம், மக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்துவதாகும். இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சி, சமத்துவ உரிமை, அரசின் நடுநிலைமை உள்ளிட்டவற்றை மீறுவதாகும். அரசு முத்திரையுடன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் படங்கள் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு திட்டத்தை தனி மனித சாதனை போல் விளம்பரம் செய்து தவறானது. அரசு வழங்கும் சலுகைகளை தனிப்பட்ட சலுகைகளாக மக்களை உணர வைப்பதன் மூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ள கண்ணியம், நேர்மையான நிர்வாகம், கட்சி சார்பற்ற நடவடிக்கை உள்ளிட்ட மீறும் செயல் ஆகும்.