/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜ தேசிய தலைவர் பதவிக்கும் கடும் போட்டி|Union cabinet|Reshuffle soon|National president post
பாஜ தேசிய தலைவர் பதவிக்கும் கடும் போட்டி|Union cabinet|Reshuffle soon|National president post
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார்; மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ தேசிய தலைவர் நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இப்போது அவர், மத்திய சுகாதார அமைச்சராக இருக்கிறார். பா.ஜ கட்சி விதிகளின்படி ஒரு நபர்; ஒரு பதவி கொள்கை கடைபிடிப்பதால், புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, மாநிலங்கள் அளவில் கட்சி தலைவர்கள் மாற்றம் நடந்து வருகிறது.
ஏப் 19, 2025