வளர்ந்த பாரதம் உருவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் Modi Speech at Swaminarayan Mandir | Swaminaray
குஜராத் மாநிலம் வட்தாலில் சுவாமி நாராயண் கோயில் நிறுவப்பட்ட 200வது ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சில் பங்கேற்று உரையாற்றினார். சுவாமி நாராயண் கோயில் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு 200 ரூபாய் வெள்ளி நாணயம் மற்றும் சிறப்பு ஸ்டாம்ப் ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் எனக்கும், இந்த கோயிலுக்குமான தொடர்பு மிக நெருக்கமானது. நாட்டின் பொருளாதாரத்தை பெருக்க, உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பேசி வருகிறோம். நம் கனவு நனவாக வேண்டுமென்றால் நாம் அதிகமாக உழைக்க வேண்டும். நம்மை பிரித்தாள துடிக்கும் சக்திகள், மக்களை இனம், மதம், மொழி, ஜாதி, என பல வகைகளில் பிரிவினையை துாண்டிவிடுகின்றன. நாம் அந்த சக்திகளை இனம் கண்டு தோற்கடிக்க வேண்டும். அதற்கு முதலில் நம்மில் ஒற்றுமை அவசியம்.