போராட்டம் வேறு திசை நோக்கி பயணிப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் | Anna university student case
மாணவிக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் மாவோயிஸ்ட்? உளவுத்துறை பகீர் சென்னை அண்ணா பல்கலையில் நடந்த மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு கட்சிகள் அமைப்புகள் பெண் உரிமை இயக்கங்களுடன் மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. அதன் தொடர்ச்சியாக அம்பேத்கர்- ஈ.வெ.ராமசாமி படிப்பு வட்டத்தை சார்ந்த மாணவர் அமைப்பும் சமூக நலனுக்கான மாணவர் எழுச்சி இயக்கம் போன்ற அமைப்புகளும் அனைத்து கல்லுாரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் பெரிய போராட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த பல்கலையில் தொடர்ந்து இதுபோன்ற பல நிகழ்வுகள் நடப்பதாகவும் அங்கு பணியாற்றும் சிலர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்களை ஏற்கனவே நன்கு அறிந்திருந்தும் அரசும் போலீசும் மூடி மறைக்க பார்ப்பதாகவும் கூறுகின்றனர். இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெறுவதற்காக படிக்கும் மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்துகின்றனர்.