ஐநா கவுன்சில் கூட்டத்தில் பாக். குற்றச்சாட்டுக்கு நெத்தியடி பதில் UN Security Councile Meeting| P.H
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, போர் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என பேசினார். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை, பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதியின் இந்த பேச்சுக்கு, ஐநாவுக்கான இந்திய துாதர் பர்வதனேனி ஹரிஷ் பதில் அளித்து பேசினார். பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. 2008ல் மும்பையில் நடத்தப்பட்ட பயங்ரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் பாக் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டவை. இப்படிப்பட்ட பயங்கவரவாதிகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்துார் திட்டத்தை செயல்படுத்தியது.