/ தினமலர் டிவி
/ பொது
/ உபி மருத்துவமனையில் இதுதான் நடந்தது-பதற வைத்த உறவினர்கள் | up hospital fire | jhansi hospital fire
உபி மருத்துவமனையில் இதுதான் நடந்தது-பதற வைத்த உறவினர்கள் | up hospital fire | jhansi hospital fire
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. NICU எனப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு கொழுந்து விட்டு எரிந்தது. தீ பிடித்த போது அந்த வார்டில் 54 பச்சிளம் குழந்தைகள் இருந்தன. சம்பவ இடத்திலேயே 10 குழந்தைகள் உடல் கருகி இறந்தன. 44 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் 16 குழந்தைகள் உடலில் கொடிய தீக்காயங்கள் உள்ளன. இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து நடந்த போது மருத்துவமனையில் இருந்த குழந்தைகளின் உறவினர்கள், என்ன நடந்தது என்பதை பதைபதைப்புடன் விவரித்தனர்.
நவ 16, 2024