/ தினமலர் டிவி
/ பொது
/ பெஞ்சல் புயல் மழைக்கு சென்னையில் முதல் மரணம் UP youth dies mannady parrys broadway chennai rain fir
பெஞ்சல் புயல் மழைக்கு சென்னையில் முதல் மரணம் UP youth dies mannady parrys broadway chennai rain fir
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி நிற்கிறது. சென்னை மண்ணடியில் பிரகாசம் சாலையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சந்தன் என்ற 20 வயது வாலிபர் சென்றார். தேங்கி நின்ற தண்ணீரில் அவர் நடந்து சென்றார். ஏடிஎம் முன்புறம் உள்ள இரும்பு கம்பி மீது அவர் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
நவ 30, 2024