ராணுவத்துக்கு கட்டுப்பாடா? Operation சிந்தூர் கற்று தந்த பாடம் Upendra Dwivedi | rahul Gandhi
பார்லிமென்ட்டில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவத்தின் கைகள் கட்டப்பட்டிருந்தன. முப்படை வீரர்களுக்கும் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது என குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தான் இந்தியாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், அவரது குற்றச்சாட்டை இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மறுத்துள்ளார். சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முழு சுதந்திரத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளுக்கு வழங்கினார். இது, தங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது; அரசியல் தலைமையின் தெளிவான வழிகாட்டுதலை அப்போதுதான் முதல்முறையாக நான் பார்த்தேன். முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதால், களத்தில் சண்டையிடும் கமாண்டர்களுக்கும், வீரர்களுக்கும் கூடுதல் மன தைரியம் கிடைத்தது என உபேந்திர திவேதி கூறினார்.