அப்பர் பவானி மின் திட்டம் பாதிப்பு! | Upper Bhavani | hydro power project
நீலகிரி, குந்தா மலை பகுதியில் மின்வாரியத்திற்கு 833 மெகாவாட் திறனில் 12 நீர்மின் நிலையங்கள் உள்ளன. மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள அணைகளில் சேமிக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மின் உற்பத்தி நடக்கிறது. ஒருமுறை பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஊட்டியில் இருந்து 60 கிமீ அடர்ந்த வனப்பகுதிக்குள் அப்பர் பவானி அணை உள்ளது. இது மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் என்டிபிசி எனப்படும் தேசிய அனல்மின் கழகத்துடன் இணைந்து 1,000 மெகாவாட் திறனில் அப்பர் பவானி நீரேற்று மின் நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆக 08, 2024