உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெற்றியாளரை தீர்மானிக்க காத்திருக்கும் 7 மாகாணங்கள்! | US Election 2024 | US Election Results | US P

வெற்றியாளரை தீர்மானிக்க காத்திருக்கும் 7 மாகாணங்கள்! | US Election 2024 | US Election Results | US P

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ், குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் என ரேசில் முந்த போவது யார் என உலகமே உற்று நோக்குகிறது. மொத்த வாக்காளர்கள் 24 கோடியே 4 லட்சம். முன்கூட்டியே ஓட்டு போடும் வசதிப்படி ஏற்கனவே 8.2 கோடி பேர் ஓட்டினை பதிவு செய்துவிட்டனர். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கிய ஓட்டு பதிவு நாளை காலை 6:30 மணி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் அங்கு சில மாகாணங்களுக்கு இடையே நேர விகிதம் மாறுபடுவதால் 8 மணி வரை நீடிக்கலாம். இதுவரை நடந்த 59 தேர்தல்களில் ஜனநாயக கட்சியின் 16 பேரும், குடியரசு கட்சியின் 19 பேரும் அதிபராகி உள்ளனர். 236 ஆண்டுகளாக அதிபர் அந்தஸ்துடன் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் வெள்ளை மாளிகையில், முதல் முறையாக ஒரு பெண் வருவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை