10 நிமிடம் வெளியில் நின்றாலே காயமாகும்: அமெரிக்காவை மிரட்டும் பேரிடர் |US Flight|Winter Storm Fern
அமெரிக்காவை மிகக்கடுமையான பனிப்புயல் தாக்க இருப்பதாக அந்த நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பனிப்புயல் 1993ம் ஆண்டு வீசிய சூப்பர் ஸ்டார்ம் (Superstorm) போன்ற தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கணித்துள்ளனர். டெக்சாஸ் முதல் வட கரோலினா வரையில் கனமழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. 14 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதனால், 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸின் சில பகுதிகளில் உறைபனியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஓக்லஹோமா நகரில் பனிப்பொழிவு தென்படுகிறது. இந்த சமயத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலானது டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரை சுமார் 1,500 மைல் தூரத்திற்குப் பரவியுள்ளது.