உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீண்டி பார்த்த ஹவுதிக்கு அமெரிக்க படை பதிலடி! | US military | Yemen | Houthi | Iran

சீண்டி பார்த்த ஹவுதிக்கு அமெரிக்க படை பதிலடி! | US military | Yemen | Houthi | Iran

இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்தாண்டு துவங்கிய போர், இஸ்ரேல் - ஹெஸ்புலா இடையேயான போராக உருமாறி இப்போது இஸ்ரேல் - ஈரான் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் எச்சரித்து உள்ளார். இந்த சூழலில் ஏமனை நோக்கி அமெரிக்க படைகள் நேற்று புதிய தாக்குதலை துவங்கி உள்ளன. செங்கடலில் ஆதிக்கம் செலுத்தும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுவான ஹவுதிக்களை குறி வைத்து வான் தாக்குதல் நடந்துள்ளன. ஏமன் தலைநகர் சனா உட்பட 15 இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக செங்கடலை கடக்கும் வணிக கப்பலை குறிவைக்கும் ஹவுதிகளின் நடவடிக்கையை சரி கட்ட அமெரிக்காவும், பிரிட்டனும் பலமுறை வலியுறுத்தி வந்தன. செங்கடலில் கடல்வழிப் பாதைகளை பாதுகாக்க 12 நாடுகள் ஆபரேஷன் ப்ராஸ்பரிட்டி கார்டியன் எனும் கூட்டமைப்பையும் தொடங்கின. ஆனாலும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆட்டம் அடங்கவில்லை. கடந்த நவம்பர் முதல் செங்கடலில் சுமார் 100 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட வணிக கப்பல்கள் தாக்கப்பட்டன.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ