உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய விமானம்: மக்கள் பீதியில் அலறல் | US plane makes emergency landing

நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய விமானம்: மக்கள் பீதியில் அலறல் | US plane makes emergency landing

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், சிறிய ரக பயிற்சி விமானம் கெய்ன்ஸ்வில்லின் லீ கில்மர் நினைவு விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு தேவையான எரிபொருள் விமானத்தில் இல்லாததால் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கெய்ன்ஸ்வில்லியில் உள்ள போக்குவரத்து மிகுந்த சாலையில் வேறு வழியின்றி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ