உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புடின் கதை முடிக்க அமெரிக்கா சதி-பகீர் பின்னணி | US plot for Putin | US vs Russia | Tucker Carlson

புடின் கதை முடிக்க அமெரிக்கா சதி-பகீர் பின்னணி | US plot for Putin | US vs Russia | Tucker Carlson

புடினை போட்டுத்தள்ள பெரிய சதி அமெரிக்காவின் படுபாதக செயல்! அடுத்து அணு ஆயுத போர் ரஷ்யா அறிவித்தது என்ன? அமெரிக்காவின் பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான டக்கர் கார்ல்சன், திடுக்கிடும் சதி திட்டம் பற்றிய தகவலை வெளியிட்டு உலகை பரபரக்க வைத்துள்ளார். டக்கர் கார்ல்சன் அரசியல் விமர்சகர் மட்டும் அல்ல; உலக அளவில் நடக்கும் சதிகளையும் அம்பலப்படுத்தி வருபவர். தி டக்கர் கார்ல்சன் ஷோ என்ற பாட்காஸ்டில் பத்திரிகையாளருடன் அவர் உரையாடினார். அப்போது, ரஷ்ய அதிபர் புடினை படுகொலை செய்ய பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் சதி திட்டம் தீட்டியது. இதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி நேரடியாக 3ம் உலகப் போரை கொண்டு வர வேண்டும் என்பது தான் அதன் நோக்கம் என்றார். கார்ல்சன் சொன்ன விஷயம் உலக அரசியலில் புதிய பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது. கார்ல்சன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ரஷ்யா, புடினை கொலை செய்வோம் என்று பேசினால் கூட அணு ஆயுத போர் வெடிக்கும் என்று அதிர வைத்தது. இது பற்றி அதிபர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியது: ரஷ்ய அதிபர் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருப்பவர். எல்லா விதமான அச்சுறுத்தல்களில் இருந்தும் அவரது பாதுகாப்பை ரஷ்யாவின் சீக்ரெட் சர்வீஸ் டீம் உறுதி செய்யும்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி