டிரம்ப்பின் வரி விதிப்புக்கு கனடா பிரதமர் பதிலடி! US president trump| canada pm Mark Carney| USA tar
கனடாவின் ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை அமெரிக்க விதித்துள்ளது. அடுத்த வாரம் இது நடைமுறைக்கு வர உள்ள நிலையில், பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு அடிப்படையிலான அமெரிக்காவுடனான பழைய உறவுகள் எல்லாம் முடிந்து விட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார். கன்னடியர்களுக்கு சுதந்திரம், அதிகாரம் உள்ளது. எங்கள் வீட்டில் நாங்களே எஜமானர்கள். எங்கள் விதியை நாங்களே தீர்மானிப்போம். அமெரிக்கா உட்பட வேறு எந்த வெளிநாட்டை விடவும் நம்மால் மட்டுமே நமக்கு அதிகம் கொடுக்க முடியும் என மார்க் கார்னி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கட்டண விதிப்பு, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். இது ஒரு நேரடி தாக்குதல், எங்கள் தொழிலாளர்கள், நிறுவனங்கள் நாட்டை பாதுகாப்போம் என்று கனடா பிரதமர் கூறினார். கனடா ஆட்டோ மெபைல் துறையில் சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் மறைமுகமாக பணியாற்றுகின்றனர். கனடாவின் 2வது மிகப்பெரிய ஏற்றுமதி துறையாக ஆட்டோமொபைல் உள்ளது.