/ தினமலர் டிவி
/ பொது
/ போர் நிறுத்த பேச்சு: அதிபர் டிரம்ப் நம்பிக்கை US president trump| russia ukraine war|
போர் நிறுத்த பேச்சு: அதிபர் டிரம்ப் நம்பிக்கை US president trump| russia ukraine war|
ரஷ்யா- உக்ரைன் இடையே 3 ஆண்டாக போர் தொடர்கிறது. முந்தைய அமெரிக்க அரசு, உக்ரைனுக்கு ஆதரவாக உதவிகள் செய்தது. அமெரிக்காவில் ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியது. டெனால்ட் டிரம்ப் அதிபர் ஆனதில் இருந்து போரை நிறுத்த முயற்சி எடுத்து வருகிறார். இந்த போரால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா- ரஷ்யா உறவையும் புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டுகிறார். இதனால் உக்ரைனை அவர் ஓரம்கட்டுகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினிடம் அதிபர் டிரம்ப் போனில் பேசினார். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சவுதி அரேபியாவில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு நடத்தினர்.
பிப் 22, 2025