உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரேசில் விலகிய கிளிண்டன் ; வேட்பாளர் ஆகிறார் கமலா ஹாரிஸ்! | Kamala Harris | Joe Biden | Hillary Clint

ரேசில் விலகிய கிளிண்டன் ; வேட்பாளர் ஆகிறார் கமலா ஹாரிஸ்! | Kamala Harris | Joe Biden | Hillary Clint

நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிபர் ஜோ பைடன் ஞாயிறன்று தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளார். 2020 தேர்தலில் கமலா ஹாரிஸை துணை அதிபராக நான் தேர்வு செய்தேன். அது மிகச்சிறந்த முடிவு. எதிர்வரும் தேர்தலிலும் அவருக்கு, நான் முழு ஆதரவை அளிக்கிறேன் , அவரை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக்க வேண்டும். எதிர்த்து களம் காணும் டிரம்பை வீழ்த்த இதுவே சரியான தருணம், ஜனநாயக கட்சியினர் ஒன்றிணைந்து இதை செய்து காட்டுவோம் என்றும் பைடன் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில்; ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டுக்காக பல ஆண்டுகள் சிறப்பான தலைமைப்பண்பு ஆற்றி உள்ளார். வேட்பாளராக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அது எனக்கு கவுரவம் அளிக்கிறது.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை