ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா - அம்பலமான இரட்டை முகம் | US Russia Diesel Import | Donald Trump
ஈரான் உடனான மோதல், போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறி வருகிறது. இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசல் வழங்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மேலும் 5 லட்சம் டன்னும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக 10 லட்சம் டன் டீசலும் சப்ளை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் விலைவாசி விரைவில் கட்டுக்குள் வரும். குறிப்பாக அமெரிக்க விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கச் செய்வதே எனது முதல் முன்னுரிமை என அவர் பதிவிட்டுள்ளார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்ய டீசலை சர்வதேச சந்தைக்கு கொண்டு வர ஏதுவாக, அமெரிக்க நிதித்துறை தற்காலிக உரிமத்தை வழங்கி தளர்வு அளித்துள்ளது. அமெரிக்காவில் விரைவில் பார்லிமென்ட் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதற்காக உள்நாட்டு ஓட்டுகளை கவரவே டிரம்ப் ரஷ்யாவிடம் இறங்கி வந்துள்ளார். #USEconomy #RussiaDiesel #DonaldTrump #DoubleStandards #GlobalPolitics #FuelPrices #USPolitics #RussianOil #Inflation #InternationalNews #EnergyCrisis