ஈரானுக்கு பதில் இந்தியாவுக்கு தண்டனை... அமெரிக்கா அடாவடி US vs India | Iran Protest | Trump Tariffs
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் ஈரானில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அந்த நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா கமெனி மற்றும் அவரது அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். 31 மாகாணங்கள் மற்றும் 186 நகரங்களில் போரட்டம் தீவிரமாக நடக்கிறது. இதை ஒடுக்க போலீஸ் மற்றும் ராணுவம் மூலம் ஈரான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் பல இடங்களில் வன்முறை நடக்கிறது. இதுவரை நடந்த கலவரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் உட்பட 654 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பரம எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. மக்களை கொன்றால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் என்று அமெரிக்க அதிபர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரான் அரசை முடக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவீதம் வரி போடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.