ஈரானின் திருட்டுத்தனம்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் US vs Iran | Israel IDF | Lion's Roar
ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருவதையும், நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பதையும் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் கூறி வருகின்றன. ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை தடுக்க கடந்த ஆண்டே இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுத்தன. மொத்தம் 12 நாள் போர் நீடித்தது. முதலில் ஈரானை தாக்கியது இஸ்ரேல் தான். ஈரானின் நடான்ஸ், இஸ்ஃபஹான், அராக், ஃபோர்டோ உள்ளிட்ட அணு சக்தி மையங்கள் மீது சரமாரியாக குண்டு வீசி தாக்கின. ஃபோர்டோ தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. ஃபோர்டோ அணு மையம் பூமிக்கடியில் பதுங்கு குழியில் இருந்ததால் அதை இஸ்ரேலால் தாக்கி சேதத்தை விளைவிக்க முடியவில்லை. இதனால் தான் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கியது. தங்கள் நாட்டிடம் உள்ள சக்தி வாய்ந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாண்டவம் ஆடியது. #USvsIran #IsraelIDF #MiddleEastConflict #Geopolitics #GlobalTensions #MilitaryStrategy #PoliticalLeaders #IranNuclearDeal #ConflictNews #IDF #IslamicRepublic #Crisis #WarTensions #IranianPolitics #DefenseForces #StrategicAlliances #WorldNews #LionsRoar #AliKhamenei