உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடகொரியா-அமெரிக்கா மோதல் விஸ்வரூபம் Hwasong-19 | US-South Korean Armies drill | US vs North Korea

வடகொரியா-அமெரிக்கா மோதல் விஸ்வரூபம் Hwasong-19 | US-South Korean Armies drill | US vs North Korea

ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீன், லெபனான் நாடுகள் ஏற்கனவே யுத்த களங்களாக மாறி விட்டன. இஸ்ரேல், ஈரான் மோதலும் புதிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா, தென்கொரியா நாடுகளின் சமீபத்திய நடவடிக்கை உலகை புதிய பதற்றத்தில் தள்ளி இருக்கிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு என்றால், வடகொரியாவுக்கு ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. ரஷ்யாவுடம் வடகொரியாவும் சமீபத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தால் ஒருவருக்கொருவர் படைகள் அனுப்பி உதவ வேண்டும் என்பது தான் அதன் சாராம்சம். ஒப்பந்தப்படி உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவ வடகொரியா தனது படைகளை அனுப்பி வருகிறது. இதுவரை 8 ஆயிரம் வீரர்களை அனுப்பி உள்ளது. பயிற்சிக்கு பிறகு இவர்கள் உக்ரைன் எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பு உக்ரைனுக்கு உதவி வருவதற்கு செக் வைக்கும் விதமாக ரஷ்யா எடுத்த அஸ்திரம் தான் வடகொரியாவின் உதவி. ரஷ்யாவுக்கு தனது படைகளை வடகொரியா அனுப்பியதற்கு உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார். அமெரிக்காவும் தனது வேலையை காட்ட ஆரம்பித்தது. வடகொரியாவை மிரட்டும் விதமாக தென்கொரியாவுடன் சேர்ந்து போர் ஒத்திகையை துவங்கியது. சில நாட்கள் முன்பு வடகொரியா எல்லை பகுதியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் போர் விமானங்கள் குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்டன.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை