உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டோட்டல் ஐரோப்பாவையும் அமெரிக்கா அலறவிட்ட பின்னணி US vs Ukraine | UN | Russia vs Ukraine | US vs EU

டோட்டல் ஐரோப்பாவையும் அமெரிக்கா அலறவிட்ட பின்னணி US vs Ukraine | UN | Russia vs Ukraine | US vs EU

உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொது சபையில் முக்கிய தீர்மானம் ஒன்று ஓட்டெடுப்புக்கு வந்தது. ரஷ்யாவை கண்டிக்கும் வகையில் அந்த தீர்மானத்தை உக்ரைன் கொண்டு வந்தது. ‛உக்ரைனுக்கு எதிராக முழு நீள போரில் மூன்று ஆண்டுகளாக ரஷ்யா ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உக்ரைன் இறையாண்மையை உறுதி செய்து, அமைதியை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் முன்மொழிந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 93 நாடுகள் ஓட்டுப்போட்டன. எதிராக 18 நாடுகள் ஓட்டுப்போட்டன. அதே நேரம் 65 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முக்கிய திருப்பமாக உக்ரைனுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் முதல் முறையாக ஐநா சபையில் அமெரிக்கா செயல்பட்டது. போர் ஆரம்பித்ததில் இருந்து எல்லா ஓட்டெடுப்பிலும் உக்ரைனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டது அமெரிக்கா தான். ஆனால் இந்த முறை ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டது. ஓட்டெடுப்பில் உக்ரைன் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்டது. அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், வடகொரியா உட்பட மொத்தம் 18 நாடுகள் உக்ரைன் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டன. இந்தியா, சீனா, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள், அர்ஜென்டினா உட்பட 65 நாடுகள் ஓட்டுப்போடாமல் நடுநிலை வகித்தன.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !