எத்தனால் பெட்ரோல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு! USA Tariff | Solar Panel| E20 Petrol
வரும் ஏப்ரல் மாதம் முதல், நாடு முழுதும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ராலை, குறைந்தபட்ச 95 சதவீத ஆக்டேனை கொண்டிருக்கும், ஆர்.ஓ.என். 95 தரத்துடன் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 1 முதல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய தரநிலை அமைப்பின் விதிமுறைகளின்படி 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை கட்டாயம் விற்க வேண்டும். இதில் குறைந்தபட்ச ஆர்.ஓ.என். தரம் கட்டாயமாக 95ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இ20 எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதற்கு, 2023 - 25 முதல் தயாரிக்கப்படும் வாகனங்களே பெரும்பாலும் ஏற்றவை. பழைய வாகனங்களில் மைலேஜ் குறையலாம். ரப்பர், பிளாஸ்டிக் பாகங்கள் சேதமடையலாம். எனவே இன்ஜின் சேதத்தை தடுப்பதற்காகவே இ20 பெட்ரோலில் ஆர்.ஓ.என். 95 தரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.