காட்டுப்பகுதியில் போலீஸ் நடத்திய என்கவுன்டர் | Usilampatti Police | Crime | Encounter
உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியை சேர்ந்தவர் காவலர் முத்துக்குமார். வயது 40. உசிலம்பட்டி இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 27 ம் தேதி பணிமுடிந்து அருகே உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் இருந்தான். இருவரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதால், பென் வண்ணனுக்கு காவலர் முத்துசாமி அறிவுரை கூறியிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அங்கிருந்து வெளியே வந்த முத்துகுமார், நண்பர் ராஜாராமுடன் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து வந்த சிலர், ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். கீழே விழுந்த முத்துகுமாரின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளனர். படுகாயம் அடைந்த ராஜாராம், உசிம்பட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார்.