உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய அறிவிப்பு india vs us | us tariff issue | ind vs us trade war

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய அறிவிப்பு india vs us | us tariff issue | ind vs us trade war

அமெரிக்கா நமக்கு வியாபாரம் செய்வதை விட கூடுதலாக இந்தியா அவர்களுக்கு வியாபாரம் செய்கிறது. ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் பொருட்களை நாம் கூடுதலாக ஏற்றுமதி செய்கிறோம். இந்த வர்த்தக பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. அதில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் 25 சதவீதம் பரஸ்பர வரியை இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்தது. அடுத்த சில நாட்களில் அபராத வரி என்ற பெயரில் மேலும் 25 சதவீதம் வரியை விதித்தது. ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை காரணம் காட்டி இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டது. மொத்தம் 50 சதவீதம் வரியை இந்தியாவுக்கு போட்டு தீட்டியது அமெரிக்கா. இதில் 25 சதவீத வரி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. கூடுதலாக போட்ட 25 சதவீத அபராத வரி ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வரும் என்று இம்மாதம் துவக்கத்தில் டிரம்ப் சொல்லி இருந்தார். இடைப்பட்ட காலத்தில் இந்த வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அமெரிக்கா அப்படியொரு முடிவை எடுக்கவில்லை. வரி விதிப்பை உறுதி செய்து இப்போது பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி