உன்னையும் தூக்குவேன்னு சொல்றாரு: எஸ்ஐ மீது பெண்கள் பகீர் புகார் | Uthukottai | Ellampettai village
திருவள்ளூர், எல்லம்பேட்டை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இருந்து 20 டன் மெஷின் பொருட்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஊத்துக்கோட்டை எஸ்ஐ பாஸ்கரன் எல்லம்பேட்டை சென்றார். விசாரணை என்கிற பெயரில் வரம்பு மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எல்லம்பேட்டை கிராம மக்கள் சார்பில் எஸ்ஐ பாஸ்கரன் மீது திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆபீஸில் புகார் அளிக்கப்பட்டது. #Uthukottai #Ellampettai #PoliceBrutality #PoliceMisconduct #SexualHarassment #TamilNadu #CrimeNews #VillagersProtest #SpecialSubInspector #HumanRights