போலீஸ் முன்னிலையில் இந்து மாணவனுக்கு சோகம் Bengali Hindu boy Utsab Mandal assaulted
இடஒதுக்கீடுக்கு எதிராக வங்கதேசத்தில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில் 500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். உயிருக்கு பயந்து ேஷக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். கலவரத்தை ஒரு சாக்காக வைத்து இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் குறி வைத்து தாக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 200க்கும் அதிகமாக நடந்துள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் குரல் கொடுத்த பிறகு, இந்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ். அரசியல் காரணங்களுக்காக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்படுவதாக யூனுஸ் நேற்று கூறினார்.