/ தினமலர் டிவி
/ பொது
/ அறிவிப்புக்கு முன்பே சூடுபிடிக்கும் தேர்தல்களம்! Uttar Pradesh | Bye Election | BJP | Samajwadi Part
அறிவிப்புக்கு முன்பே சூடுபிடிக்கும் தேர்தல்களம்! Uttar Pradesh | Bye Election | BJP | Samajwadi Part
தேசிய அரசியலை நிர்ணயம் செய்யும் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று உத்தர பிரதேசம். மொத்தம் 80 லோக்சபா தொகுதிகளையும், 403 சட்டசபை தொகுதிகளையும் கொண்டுள்ள, இந்த மாநிலத்தின் வெற்றி எப்போதும் எதிர்பார்ப்பு மிகுந்ததாகவே உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ ஆட்சி செய்யும் இங்கு, 10 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ களம் இறங்கியுள்ளது.
ஆக 11, 2024