/ தினமலர் டிவி
/ பொது
/ உத்தராகண்ட்டில் சிக்கிய 30 தமிழரை மீட்கும் பணி Uttarakhand rains Landslides tamilnadu 30 pilgrims st
உத்தராகண்ட்டில் சிக்கிய 30 தமிழரை மீட்கும் பணி Uttarakhand rains Landslides tamilnadu 30 pilgrims st
சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் என 30 பேர் உத்தராகண்டின் ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். ஆதி கைலாஷில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேரும் நடுவழியில் தவித்தனர். உணவின்றி அவதிப்பட்டனர். இதையறிந்த கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொணடுபேசினார். அதைத் தொடர்ந்து, 30 பேரையும் உத்தராகண்ட் அதிகாரிகள் மீட்டு, ஜீப்பில் அருகில் உள்ள ஆசிரமத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.
செப் 15, 2024