உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விண்வெளி நிறுவனம் தொடங்கினார் ஸ்டாலின் மருமகன் | Vaanam Space Tech | Sabarisan

விண்வெளி நிறுவனம் தொடங்கினார் ஸ்டாலின் மருமகன் | Vaanam Space Tech | Sabarisan

வானம் என்கிற தனியார் விண்வெளி மையத்தை தொடங்கி உள்ளார் ஸ்டாலின் மருமகன் சபரீசன். சபரீசனின் தம்பி ஹரிஹரன் மற்றும் சமீர் பாரத் ராம் ஆகியோர் சேர்ந்து தொழில்நுட்ப ரீதியாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். சபரீசன் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஆலோசகராகவும் உள்ளார். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வழிகாட்டுதலில் கீழ் வானம் நிறுவனம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று லட்சம் கோடிகளுக்கு மேல் சந்தை மதிப்பு கொண்டது விண்வெளி துறை. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளமும் அமைய உள்ளது. இதனால் தமிழகம் சார்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் காத்திருக்கிறது. விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக எடுத்து செல்லும் இந்தியாவின் முதல் நிறுவனமாக வானம் தொடங்கப்பட்டுள்ளது

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை