உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர் தேங்காமல் இருக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? Vadivudai Amman Temple | Thiruvottiyur | HR

நீர் தேங்காமல் இருக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? Vadivudai Amman Temple | Thiruvottiyur | HR

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் தியாகராஜர் வசந்த உற்சவம் நடந்து வருகிறது. நேற்று மாலை உற்சவத்தின் போது சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் கோயில் உட்பிரகாரம் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. ஒற்றீஸ்வரர் சன்னதி பிரகாரத்திலும் மழை நீர் புகுந்தது. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மிகுந்த அவதி அடைந்தனர். உற்சவர் ஊர்வலத்தின் போது, சிவன் தாங்கிகள் முழங்கால் அளவு மழைநீரில் நடந்து சென்றனர். அங்கிருந்து பெண்கள், முதியவர்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். சிறிய மழை பெய்தாலே பிரகாரத்தில் மழைநீர் தேங்கி விடுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை