/ தினமலர் டிவி
/ பொது
/ சுற்றுலா வந்த கேரளா ஆசிரியர் குடும்பத்தினர் பரிதாபம்! Valparai | Hill Road | Accident
சுற்றுலா வந்த கேரளா ஆசிரியர் குடும்பத்தினர் பரிதாபம்! Valparai | Hill Road | Accident
கேரளா மாநிலம் பெருந்தல்மன்னாவில் இருந்து 13 பேர் கொண்ட குழுவினர், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். வால்பாறை மலைப்பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு, ஊர் திரும்புவதற்காக வேனில் கீழ் நோக்கி வந்தனர். 21 வயதான டிரைவர் முகமது பாசித் வாகனத்தை ஓட்டினார். வாகனம் 13வது கொண்டை ஊசி வளைவில் இறங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலைச்சரிவில் உருண்டது. 13ம் கொண்டை ஊசி வளைவில் இருந்து உருண்ட வாகனம், 800 அடி கீழே இருக்கும் ஒன்பதாம் கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
ஏப் 17, 2026